ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத வர முயல்பவர்கள் தொடர்பாக எடுக்கப்படும் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் மூலம்,
கடந்த ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை சட்டவிரோத பயணங்கள் தொடர்பில் எவ்வித கைதும் நடக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு மையங்கள் தீவு நாடுகளான பப்பு நியூ கினியா, நவுருத்தீவில் அமைந்திருக்கின்றன.
இவை RegionalProcessing மையமாகவும் அறியப்படுகின்றன. நவுருவில் உள்ள இந்த மையத்தில் எவரும் தற்போது தடுப்பில் எனக் கூறப்பட்டுள்ளது. அதே போல், பப்பு நியூ கினியாவின் மனுஸ்தீவு மையம் கடந்த 2017 அக்டோபர் 31ல் மூடப்பட்டமை ஜூலை மாத அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட பல அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள், தடுப்பிற்கான மாற்று இடமாக(Alternative Places of Detention) அறியப்படும் ஹோட்டல்களில் சுமார் ஓர் ஆண்டுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சமூகத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்ற போராட்டங்களும் நடந்து வருகின்ற நிலையில், அவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் எனத் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.