தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் இன்று சந்தித்து கல்துரையாடிய போது, கூட்டமைப்பின் பேச்சாளர் மற்றும் கொறடா பதவிகளில் மாற்றம் செய்வது என்ற பங்காளிக் கட்சித் தலைவர்களின் முடிவை இரா.சம்பந்தன் ஏன மனதாக ஏற்றுக் கொண்டார்.
மேலும் இக் கூட்டத்தில்…
கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டமென்றுதான் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது பல எம்.பிக்கள் இன்மையால் கூட்டமைப்பின் தலைவர்கள் மட்டும் கலந்துரையாடினர்.
இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், த.சித்தார்த்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் இந்த பேச்சில் கலந்து கொண்டனர்.
இதன்போது, கூட்டமைப்பின் அண்மைக்கால பின்னடைவு மற்றும் மாற்று நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது, கூட்டமைப்பின் பேச்சாளரை மாற்ற வேண்டிய தேவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்போது பேச்சாளரை உடனே மாற்றலாம் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் கொறடாவாக சி.சிறிதரன் செயற்பட்டு வருகிறார். அவர் நாடாளுமன்ற அமர்வுகளில் தொடர்ச்சியான உரையாற்றுவதாக செய்திகள் தினம் வெளியாகும்.
ஏனைய உறுப்பினர்கள் உரையாற்றும் செய்திகள் வருவதில்லை இந்த விடயமும் இன்று விரிவாக ஆராய்ந்தனர்.
சிறிதரன் கொறடா என்ற ரீதியில் உரையாற்றுபவர்கள் விபரத்தை தானே தீர்மானித்து, பெயரை வழங்கி விடுவார். அடிக்கடி தனது பெயரையே வழங்கி விடுவார்.
இன்றும் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட 18 நிமிடத்தையும், தனது உரையென பதிவு செய்திருந்தார்.
பின்னர் செல்வம் அடைக்கலநாதன் இதில் தலையிட்டு, நீண்ட இழுபறியின் பின்னர் 9 நிமிடத்தை பெற்று கோவிந்தன் கருணாகரத்திற்கு வழங்கினார் ,கொறடாவாக செயற்படும் சிறிதரன் நேர்மையாக செயற்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் இருந்து வந்த நிலையில், இன்று இது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
கொறடாவிலும் உடன் மாற்றம் செய்யலாம், நீதியாக நடக்கக்கூடிய ஒருவரை நியமிக்கலாமென சம்பந்தன் குறிப்பிட்டார்.
இரண்டு நியமனங்களையும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தை கூட்டி மேற்கொள்ளலாமென இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அத்துடன், தேசியப்பட்டியல் விவகாரமும் ஆராயப்பட்டது. தனக்கு எதிராக செயற்பட்ட குழுவொன்று திருட்டுத்தனமாக தேசியப்பட்டியலை வழங்கியதாகவும், சம்பந்தன் அதற்கு துணை போனதாகவும் மாவை நேரடியாக கட்சித் தலைவர்கள் முன்னிலையில் தனது ஆதங்கத்தைச் சுட்டிக்காட்டினார்.
தேசியப்பட்டியல் விவகாரத்தில் இரா.சம்பந்தன் நடந்து கொண்ட விதம் தவறானது என ஏனையவர்களும் சுட்டிக்காட்டினர் மௌனமாக சம்பந்தன் பதில் எதுவும் கூறாது உட்கார்ந்திருந்தார்.
மாவை சேனாதிராசா அதைப்பற்றி வெளிப்படையாக பேசவில்லை, அம்பாறை, பெண் பிரதிநிதித்துவம் என பேசிக்கொண்டிருந்தார், அதனால் குழப்பம் நேர்ந்து விட்டதென சம்பந்தன் குறிப்பிட்டார்.
கலையரசனை ஒரு வருடத்தில் பதவிவிலக வைத்து, அந்த நியமனத்தை மாவைக்கு வழங்கலாமா என ஒரு யோசனை முன்வைக்கப்பட்டபோது, மாவை அதை நிராகரித்து அம்பாறையில் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சியில் பல சலால்களைச் சந்தித்து கலையரசன் இழந்தது அதிகம் எனவே அந்த பதிவி குறித்து விவாதிப்பது இனிவருங் காலங்களில் பொருத்தம் இல்லை எனக் மேலும் குறிப்பிட்டார்.