நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனது கருத்தை நாடாளுமன்றத்தில் வெளியிடும் உரிமை இருப்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வாசுதேவ நாணயக்கார இதனை கூறியுள்ளார்.
இதனால், விக்னேஸ்வரனின் கருத்தை நாடாளுமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது. விக்னேஸ்வரனின் கருத்தை எவராவது எதிர்த்தால், எதிர்க்கும் உரிமையும் உள்ளது. எவரும் எதிர்க்கின்றனர் என்பதால், விக்னேஸ்வரனின் கருத்து கூறும் உரிமையும் இல்லாமல் போகாது எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
சி.வி. விக்னேஸ்வரனும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் உறவினர்கள், விக்னேஸ்வரனின் புதல்வர் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மகளை திருமணம் செய்துள்ளார். அத்துடன் விக்னேஸ்வரனின் மற்றுமொரு புதல்வர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கேசரலால் குணசேகரவின் உறவு முறை பெண்ணை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.