செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பொங்கலுக்கு ருத்ரதாண்டம் ஆடவிருக்கும் ஈஸ்வரன்!

பொங்கலுக்கு ருத்ரதாண்டம் ஆடவிருக்கும் ஈஸ்வரன்!

1 minutes read
Actor Simbu's next film "Eswaran" release its motion poster

நடிகர் சிம்பு நடிக்கும் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் 46வது படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த சிம்பு, தற்போது அப்படத்திற்கான டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

படத்திற்கு ஈஸ்வரன் என பெயரும், பாம்பை கையில் வைத்தது போன்ற போஸ்டரும் சமூக வலைதளத்தில் தற்போது பெரிதாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாக சுசீந்திரன் திரைப்படம் என்றாலே விளையாட்டை மையப்படுத்தி தான் எடுக்கப்படும்.

இந்த படமும் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் என்பது ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்ததே, தற்போது இணையத்தில் சிம்பு ரசிகர்கள் ஈஸ்வரன் மற்றும் #SilambarasanTR46 என்ற ஹேஷ்-டேக் மூலம் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் கார்த்தி நடித்த சுல்தான் படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் அந்த வரிசையில் சிம்புவின் ஈஸ்வரன் படமும் இணைந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More