இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் பணப்பரிமாற்றத்தை குறைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாணயத் தாள்கள், சில்லறைகள் மற்றும் காசோலை புத்தகங்கள் பயன்படுத்துவதனை முடிந்தளவு குறைக்குமாறு இலங்கை வங்கியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இணையத்தள கொடுக்கல் வாங்கல்கள் அல்லது அட்டை மூலம் மேற்கொள்ளப்படுப்படும் கொடுக்கல் வாங்கல்களுக்கு பழகிக் கொள்வதற்கு இது சிறந்த காலப்பகுதி என சங்கத்தின் தலைவர் லக்ஷ்மன் சில்வா தெரிவித்துள்ளார்.
கணக்கு ஒன்று இல்லை என்ற போதிலும், நாட்டில் காணப்படும் மோசமான நிலை காரணமாக எந்தவொரு வங்கியிலும் எவ்வித வங்கி கட்டணமுமின்றி அட்டை மூலம் மக்கள் பணம் பெறுவதற்கான வசதிகளை வழங்குமாறு இலங்கை வங்கியாளர்களின் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கடன் அட்டையின் அதிகபட்ச கடன் எல்லை முழுமை அடையும் அந்த அட்டையில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்காமல் இருப்பதற்கு வங்கி கட்டமைப்பு தீர்மானித்துள்ளது.