0
ஐபிசதுரங்க அக்கடமியால் வவுனியா பிரதேச செயலகத்தில் 2020ம் ஆண்டிற்கான சதுரங்கச் சுற்றுப்போட்டி கடந்த 06ஆம் திகதி மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட சதுரங்க சம்மேளனத்தின் ஆலோசகர் வைத்திய கலாநிதி பிரசன்னா, பொருளாளர் பிரதேச செயலக விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் விந்துஜன் என பலரும் கலந்து கொண்டனர்.
முதலாம் இடத்தை கே. கனஹரி, இரண்டாம் இடத்தினை கே.குலவிழி மற்றும் ஏ.சரோன்சன் பெற்றுக்கொண்டனர்.