தேவையான பொருட்கள்
கொத்தமல்லி – 1/2 கப்,
முட்டை – 4,
பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது),
கேரட் – 1 (பொடியாக நறுக்கியது),
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது),
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது),
உப்பு – தேவைக்கு,
குருமிளகு – 1/2 டீஸ்பூன்,
மொசரெல்லா சீஸ் – 1/2 கப் (துருவியது),
சோளம் – 2 டீஸ்பூன்.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் முட்டை, உப்பு, குருமிளகு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பின் அதில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், கேரட், தக்காளி, வெங்காயம், மொசரெல்லா சீஸ், ேசாளம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின் ஒரு மப்பின் சிலிகான் மோல் எடுத்து அதில் எண்ணெய் தடவி முட்டையை ஊற்றவும். ஒரு கடாயை சூடு செய்துபின் அதில் ஒரு stand-யை வைத்து அதன்மேல் சிலிகான் மோல் வைத்து 10 முதல் 15 நிமிடம் வரை வேக விடவும். கமகமக்கும் சுவையான முட்டை மப்பின் ரெடி. மைக்ரோ ஓவன் என்றால் 180c பிரீஹீட் செய்து 10 நிமிடம் வைக்கவும்.