தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்திக்க உள்ளார்.
இதன்போது தமிழக அரசு மீது வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளுநர் புரோகித்திடம் திமுக தலைவர் முக ஸ்டாலின் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தற்போதே ஆரம்பமாகியுள்ளன.
இதன்காரணமாக தி.மு.க, – அ.தி.மு.க இடையே கடுமையான போட்டி நிலை எழுந்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.