முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் நேற்று (26) கொரோனாத் தொற்று உறுதியானவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“குறித்த தொற்றாளர் தகவல் வழங்கியதன் அப்படையில் அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள், மற்றும் அவர் நேற்று ஐயப்பன் கோவில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமையால் அந்த வழிபாட்டில் பங்கேற்ற நபர்கள் ஆகியோர் குடும்பங்களுடன் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இருந்தபோதிலும் அந்த நபர், புதுக்குடியிருப்பில் மட்டுமல்லாமல் விசுவமடு வரையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் பெருமளவானோருடன் தொடர்பிலும் இருந்துவந்துள்ளார். இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரி பணிபமனையுடன் தொடர்புகொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுத்து வருகிறோம்.” – என்றும் தெரிவித்தார்.