தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸுக்காக இலங்கை 396 ஓட்டங்களை பெற்றுள்ளது.
திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டிகளின் கீழ் டீகொக் தலைமையிலான தென்னாபிரிக்க அணியுடன் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதன் முதல் போட்டியானது நேற்றைய தினம் செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்று பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 340 ஓட்டங்களை பெற்ற நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந் நிலையில் முதல் இன்னிங்ஸின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க இலங்கை அணி 10 விக்கெட்டுகளை இழந்து 396 ஓட்டங்களை பெற்றது.
கசூன் ராஜித 12 ஓட்டங்களுடனும், விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் டக்கவுட்டுடனும் ஆட்டமிழக்க சானக்க 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் லூத்தோ சிபாம்லா 4 விக்கெட்டுகளையும், வியான் முல்டர் 3 விக்கெட்டுகளையும், அன்ரிச் நார்ட்ஜே மற்றும் லுங்கி நிகிடி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள தென்னாபிரிக்க அணி 6 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 24 ஓட்டங்களை குவித்துள்ளது.