தேவையான பொருள்:
இஞ்சி – 1 கப்
கிராம்பு, பட்டை – 10
அன்னாசிப்பூ -5
ஏலக்காய் – 5 கிராம்
துளசி – ஒரு கைப்பிடி
மிளகு – 5 கிராம்
அதிமதுரம் – 2 ஸ்பூன் அளவு
அஸ்வகந்தா – 1/4 ஸ்பூன்
செய்முறை:
இஞ்சியை தோல் சீவி தண்ணீரில் நன்றாக அலசி கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு அதை வெயிலில் தண்ணீர் உலரும் வரை காய வைக்கவும்.
துளசியை தண்ணீரில் அலசி அதையும் நன்றாக வெயிலில் உலர விட வேண்டும்.
பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து அதில் மிளகு மற்றும் ஏலக்காயை வறுத்து கொள்ளவும்.
அடுத்து அதில் வெயிலில் உலர்ந்த இஞ்சி, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ ஆகிவற்றை சேர்த்து வறுக்க வேண்டும்.
வறுத்த கலவையை ஆறவைத்து மிக்சியில் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்த பொடியில் அதிமதுரம் மற்றும் அஸ்வகந்தா பொடியை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இதை தினமும் காலையில் குடிக்கும் தேநீரில் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால் உடலுக்கு எந்த வித நோயும் அண்டாது.