லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்க விருக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை “அவள்” படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கவுள்ளார்.
“ஐயா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. “சந்திரமுகி” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் நயன்தாரா. இவர் அதன் பின் “கஜினி”, “பில்லா”, “யாரடி நீ மோகினி”, “தனி ஒருவன்”, “மாயா” , “நானும் ரௌடிதான்”, “அறம்”, “இமைக்கா நொடிகள்”, “கோலமாவு கோகிலா”, “விஸ்வாசம்” என்று தொடர்ச்சியாக நிறைய வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப் பட்டார்.
“அவள்” படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ். தற்போது நயன்தாரா படத்தை இயக்கப் போவதாக சொல்லப் படுகிறது. இப்படத்தில் நயன்தராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் உள்ள வகையில் திரைக்கதை அமைத்துள்ளதாக இயக்குனர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார்.
நயந்தாரா
மிலிந்த் ராவ் 7 வருடமாக இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு “காதல் டூ கல்யாணம்” என்ற படத்தை இயக்கினார். 2010ல் எடுத்து முடிக்கப் பட்ட இத்திரைப்படம் இன்றுவரை ரிலீசாகாமல் உள்ளது. அதன் பிறகு சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகிய “அவள்” என்னும் திகில் திரைப்படத்தை இயக்கினார் மிலிந்த் ராவ். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி ரசிகர்களிடம் அமோக ஆதரவு பெற்றது.