4
தளபதி விஜய்க்கு உருக்கமான கடிதம் எழுதிய ஷோபா சந்திரசேகர்!! தளபதி விஜய்க்கு தமிழகமெங்கும் ரசிகர்கள் குவிந்திருக்க அவரது வீட்டினில் இருந்து ரசிகர்களின் கடிதம் வந்துள்ளது.
அட்லி இயக்கத்தில் பிகில் படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. கூடியவிரைவில் இசை வெளியீடு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், தளபதி விஜய்க்கு அவரது தாய் ஷோபா சந்திரசேகர் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். பிகில் படத்திற்கு அதில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இணையம் முழுதும் விஜய் ரசிகரகள் அக்கடித்ததை பரப்பி வருகிறார்கள்.
“ஈன்றெடுக்கும் சிசு ஒரு செவிலியரின் உள்ளங்கையில் தவழ்ந்து பின் தாயின் உள்ளம் நோக்கி வரும். அவளும் உச்சி முகர்வாள். ஆனால், நான் பெற்ற பிள்ளை இன்று கோடானுகோடி தாய்மார்கள், ரசிகர்கள் உள்ளங்களில் தவழ்ந்து கொண்டிருப்பதையும் அவர்களும் அதை தளபதியாய் கொண்டாடிக் கொண்டிருப்பதையும் காண்கையில் என் இமை ஓரம் சிறு ஈரம் கசிந்து வழிகிறது. அதை மீறி வேறென்ன நான் எழுத்தில் வடிக்க விஜய் உன்னைப் பற்றி.” என்று அதில் எழுதப்பட்டுள்ளது.