நீ யார் என்று அறியாவிட்டால் இன்னொறுவன் உனை பயன்படுத்துவான் என்ற கதைக் கருவை கொண்டு குறும்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார் வவுனியாவை சேர்ந்த நவநீதன்.
எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ள இக் குறும்படம், அண்மைய கால குறும்பட வளர்ச்சியின் வெளிபாடுகளில் மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக காணப்படுகின்றது.
பல்வேறு போராட்டங்களின் மத்தியில் தான் உருவாக்கிய குறும்படத்தை எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் திகதி யூடியூப் இணையத்தின் ஊடாக வெளியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பணிகளை மேற்கொண்டுள்ளார் க.நவநீதன். படப்பிடிப்பை மேற்கொண்டு படத்தொகுப்புயும் செய்துள்ளார் டினோஜன். படத்திற்கான இசையை குமணன் வழங்கியுள்ளார்.
சசிதரன், தருசிகன், புகழ் மற்றும் படத்தை இயக்கிய நவநீதன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். பழி குறும் படத்தை இயக்கியுள்ள நவநீதன், ஏற்கனவே வெற்றிப்பாதை, நினைப்பது நடப்பதில்லை, மாற்றம் ஆகிய குறும்படங்களை இயக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வணக்கம் லண்டனுக்காக பூங்குன்றன்