பாலிவுட்டில் மீடூ இயக்கம் பரபரப்பாக ஆக காரணம் நடிகை தனுஸ்ரீ தாதா. அவர் பிரபல நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்த பிறகு பல நடிகைகள் தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து தைரியமாக பேசினார்கள்.
நடிகை கீதிகா தியாகி பாலிவுட் இயக்குநர் சுபாஷ் கபூர்குல் படத்தில் இருந்து விலகினார் அமீர் கான். இந்நிலையில் அவர் மொகுல் படத்தில் சுபாஷ் கபூருடன் சேர்ந்து பணியாற்றப் போவதாக தற்போது அறிவித்துள்ளார்.
மொகுல் படத்தில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார் ஆமீர் கான். தான் சுபாஷ் கபூரை ஒதுக்கியதால் மொத்த திரையுலகமும் ஒதுக்கிவிட்டதாகவும், பாலியல் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதன் தீர்ப்பு வரும் வரை சுபாஷ் வேலை செய்யாமலா இருக்க முடியும் என்று ஆமீர் தெரிவித்துள்ளார். ஆமீர் கானின் விளக்கத்தை பார்த்த தனுஸ்ரீயால் கோபப்படாமல் இருக்க முடியவில்லை.
ஆமீர் கான் பற்றி தனுஸ்ரீ கூறியதாவது,
தான் மீண்டும் சுபாஷ் கபூருடன் சேர்ந்து வேலை செய்யப் போவதற்காக ஆமீர் கான் அளித்த விளக்கத்தை பார்த்தேன். அவரிடம் ஒரேயொரு கேள்வி தான் கேட்க விரும்புகிறேன். ஒரு பெண் பாலியல் தொல்லைக்கு ஆளானதை பார்த்து பாலிவுட்டில் ஒருவருக்கு கூட இரவில் தூக்கம் வராமல் போனது ஏன், அந்த பெண்ணை ஒதுக்கி வைப்பது ஏன்?
பாலியல் தொல்லை கொடுத்தவருக்காக அனைவரும் பரிதாபப்படுகிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. என் கெரியர் எப்படி செல்கிறது என்று ஒருவர் கூட கேட்கவில்லை. நான் திறமையான நடிகை. ஆனால் என்னை வைத்து படம் எடுக்குமாறு எந்த பெரிய ஆளும் யாருக்கும் கடிதம் எழுதவில்லை. என்னை எல்லாம் பார்த்தால் உங்களுக்கு பாவமாக தெரியவில்லையா ஆமீர் என்று தனுஸ்ரீ கேள்வி எழுப்பியுள்ளார்.
தனுஸ்ரீ கூறியதை கேட்ட ரசிகர்களோ, பாலிவுட்டில் மட்டும் இல்லை எந்த உட்டாக இருந்தாலும் பாலியல் தொல்லைக்கு ஆளானவரை தான் திரையிலகினர் ஒதுக்கி வைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக பொன்னியின் செல்வன் படத்திற்கு பாடல் எழுதப் போவதாக வைரமுத்து அறிவித்தபோது பாலியல் புகாரில் சிக்கியவரையா ஒப்பந்தம் செய்வது என்று கேட்டு ரசிகர்கள் இயக்குநர் மணிரத்னத்தை விளாசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.