சினம்கொள் திரைப்படம் பிரபாகரனின் திரைப்படக் கனவை நிறைவேற்றியுள்ளது என்று இயக்குனர் இமயம் பாரதிராஜா புகழாரம் சூட்டியுள்ளார். அண்மையில் சினம்கொள் திரைப்படத்தை சிறப்பு காட்சி மூலம் பார்வையிட்ட இயக்குனர் திரு. பாரதி ராஜா அதன் பின்னர் இப் படம் குறித்து தனது நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது,
என் இனிய தமிழ் மக்களே.!
திரையுலகில் திரைப்படத்தின் வாயிலாக இந்த சமூகத்திற்கு சில விஷயங்களை பதிவு செய்யவேண்டியிருக்கிறது. இதுவோரு திரைப்படமாக இருந்தாலும் சில விஷயஙகள் நம்மை ரொம்ப பாதிக்கும். ஏன்னா நிகழ்வுகள் நெகிழச்செய்யும். அதை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
ஈழத்திலிருந்து என் நண்பன் இயக்குனர் ரஞ்சித் ஒரு படம் சினம்கொள் என்ற தலைப்பிலே அந்த ஈழப் போராளிகள் விடுதலை போரில் போராடி அந்த சிக்கலுக்கு பின்னால் ஒரு புதிய சூழல் இலங்கையில் அதை அடிப்படையாக வைத்து அதற்கு பின்னால் விளைவுகளை வைத்து ஒரு கதாநயகனை வைத்து ஒரு கதை களம் கொண்டுபோகிறார்.
போராளிகளின் இன்றைய நிலமை
ரஞ்சித் ஈழத்தில் பிறந்ததினால் அதை தெளிவாக சொல்ல முடிந்தது. இதை மக்களுக்கு பதிவு செய்ய வேண்டிய முக்கியமான ஒரு படம். ஏன்னென்றால் வெறும் ஆயுதம் தாங்கி போராடியது மட்டுமில்ல அவர்கள் மண்ணுக்காக மக்களுக்காகவும் வாழ்ந்தர்கள் என்பதை ஒரு அடிப்படையான விஷயத்தை ரொம்ப அழகா சொல்லியிருக்கார் டைரக்டர்.
இது என்னன்னா அதன் பின்விளைவுகள் போர் முடிந்து எவ்ளோ பேர்கள் கானும் அன்னை இழந்து, அக்கா தங்கச்சிகளை இழந்து தாய் ஒரு பக்கம் யாரு எங்க இருக்காங்கன்னு தெரியாத ஒரு சூழலில் தன் மனைவியை தேடி வரான். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு வரும் அந்த சூழலில் இந்த போராளிகளோட நிலைமை என்ன.?
இந்த யாழினி என்ற கேரக்டர் சூப்பர். சோ இதனால் பலன் அடைந்த மேல்தட்டு மக்கள் இருக்கிறார்கள். அவர்களால் என்ன விளைவு. என்கின்றதெல்லாம் ரொம்ப அழகா சொல்லியிருக்காங்க., என்னன்னா அந்த ஹூரோ அவர் அலையும் போது நமளுக்கும் அந்த அலைச்சல நமக்கும் கஷ்டம். ஏன்னா மனைவிய தேடி அலையனும் இதற்கான பல விஷயங்கள் உண்டு.
தேடி அலையும்போது இதற்கு ஒரு போராளி பெண் யாழினி. ஹூரோவுக்கு உறுதுனையா இருந்து உதவி பன்றாங்க. அதுக்கப்புறம் அதில் மெயின் பாயின்ட் என்னன்னா இவர்களால் இந்த பிரச்சனையில் பலனடைந்த மேல்தட்டு மக்கள் சில நேரங்களில் தங்களுடைய இந்த இழப்புகளை பெரியதாக நினைப்பதில்லை. தங்களுக்கு என்று ஒன்று வரும்போது தான் அவர்கள் உணர்கிறார்கள்.
எல்லாருமே நிஜபாத்திரங்கள்
இந்த கதாநாயகனின் மேல் ஒரு பழிச்சொல் வருகிறது. அவன் மண்ணுக்கும், மக்களுக்கும் நிற்கிறானே தவிர மற்ற எந்த இதுவும் இல்ல. ஒரு மேல்தட்டு மக்களோட பெண்ணை கடத்திட்டு போயிடுறாங்க இத ஹூரோ தான் குற்றவாளி என்று நினைக்கிறார்கள். ஆனால் அவன் தான் நல்லது செய்கிறான். ‘இன்னா செய்தாறே உறுத்தல் அவர்நான நன்மையும் செய்து விடல்’ என்பதை போல் ரொம்ப அற்புதமா பன்னியிருக்காங்க., அதிலே என்னன்னா எல்லாருமே வாழ்ந்திருக்காங்க.
என்னன்னா திரைப்படத்தில எல்லாருமே நடிக்கிறாங்கன்னு உங்களுக்கு தெரியும் ஆனா அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்காங்க நடிகர்கள், போராளியாக அந்த நோயில் வதைபடும்போது கஷ்டமாக இருக்கிறது, எல்லாருமே நிஜபாத்திரங்களாகவே நடிச்சிருக்கிறது எனக்கு பிடிச்சுருக்கு.
அந்த பையன் ஹூரோவாகட்டும், மனைவியா நடிச்சிருந்தவங்கள சும்மா சொல்ல முடியாது. ரொம்ப அற்புதமா நடிச்சிருந்தாங்க கண் கலங்கிடும் சில இடங்களில் எல்லாம். ஒரு திரைவெளியில் நல்ல வாழ்க்கைய சொல்லியிருக்காங்க., நமக்கு ஒரு திரைப்படம் பார்க்கிற உணர்வை ஏற்ப்படுத்தாமல் அதோடு நம்மை ஒன்றினைய வைத்ததுதான் அதோட சிறப்பு ரஞ்சித்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
ஒளிப்பதிவு எந்த இடத்திலும் ஒரு சினிமாதனம் இல்லாமல் மிகவும் எதார்த்தமான ஒளிப்பதிவு ஒளி அமைப்பு தேவையான இடத்திற்கு மட்டும் பயன்படுத்தி ஒருவித மாயை ஏற்படுத்தாமல் அதிகமான ஒப்பனையும் இல்லாமல் அழகாக, எதார்த்தமாக படம் எடுத்துள்ளார்கள்.
இப்படத்தை எடுக்கும் தகுதி ரஞ்சித்திற்கே உண்டு
இதில என்னுடைய பெருமதிப்புக்குரிய இசையமைப்பாளர் ரகுநந்தன் அற்புதமான இசை கலைஞன். என்னோட படங்கள் கூட ரெண்டு படம் பன்னிட்டிருக்காரு., இந்த படத்திற்கு எது அளவுகோள் என்பதை ரொம்ப தராசுலப்போட்ட மாதிரி அழகா இசையமைச்சருக்காரு, சில நேரம் டெம்போ நம்மல இழுத்துட்டு போயிட்டே இருக்கும். இது நமளயறியம்மா சில விஷயங்கள்ள முன்னுக்கு வரவைக்குது இசை. அதை ரகுநந்தன் சாத்தியப்படுத்திட்டாரு.
பொதுவாக இத நாம பன்னியிருந்தா கூட கேள்விப்பட்டு பன்னியிருப்போம், இவர்கள் வாழ்ந்திருக்காங்க ரஞ்சித்தும் சரி மத்தவுங்களும், ஈழப்பிரதேசத்தில் வாழ்றவுங்க பொதுவா மண் மீதும், மொழி மீதும், ஒரு அழுத்தமான பற்றும் பாசமும் கொண்டவுங்க., ஆக இந்த படம் எடுப்பதற்கான முழு தகுதியும் ரஞ்சித்துக்கு உண்டு, ஒரு இயக்குனராக அதை சாத்தியப்படுத்திவிட்டார் ரஞ்சித். ஒவ்வொரு தமிழனும், உலகளவிலே இந்த படத்தை பார்த்தால் அந்த மண்னின் விளைவுகளை நம்ம நேரடியாக பார்க்கிற ஒரு உணர்வு ஏற்படுத்துகிறது. ஒரு நல்ல செய்தியும் சொல்லப்பட்டிருக்கிறது., ஈழத்தமிழர்களுக்கு மட்டுமில்லை இந்த படம், உலகத்தமிழர்களுக்கானது இந்த திரைப்படம். அவசியம் எல்லாரும் இதை போய் பார்க்கனும் அப்பதான் அந்த கலைஞர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்கும். நன்றி வணக்கம்…
லைவ் சவுண்டு அப்படியே உயிர்பாயிருந்துச்சு
ஒளிப்பதிவு மிக இயல்பாகவும், எதார்த்தமாகவும் பன்னியிருந்தாரு, இதுல என்ன ஒரு சிறப்புன்னா ஒளிப்பதிவு செய்ததே தெரியாதவாறு அந்த வாழ்வியலை ஆனுருக்கிற மாதிரி எடுத்து கொடுத்து இருக்காரு பழனிக்குமார் மாணிக்கம். திரைக்காட்சிகளுக்கு போதுமான ஒளிஅமைப்பு செய்திருந்தாலும் திரைப்படத்தில் பார்க்கும்போது மிக ஏதார்த்தமாக கண் எதை பார்க்குமா அதே உணர்வை நமக்கு திரையில் காட்டுகிறார். வீண் அலங்காரம் படுத்தாமல் பன்னியிருக்கறது பழனிக்குமாருக்கான மிக பெரிய வெற்றி. இந்த திரைப்படத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் அதிகமாக தமிழகத்திலிருந்து வேலை செய்திருக்கிறார்கள்.
நடிகர்கள் மற்றும் ஒப்பனை, ஒலி அலங்காரம் ஈழத்து நபர்கள் செய்திருக்கிறார்கள். எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் மிக சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது என்வென்றால் நான் கேள்விப்பட்டதும். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது அது என்னன்னா பொதுவா படம் எடுத்தால், வெளிப்புறங்களில் சத்தம் மற்றும் இரைச்சல்கள் அதிகமாக இருக்கும் என்று டப் பன்னுவோம். ஆனா இப்ப ரொம்ப தொழில்நுட்பம் வளந்திருக்கு இவங்க எதையும் டப் பன்னல்ல. எல்லாமே லைவ் சவுண்டு அப்படியே உயிர்புடன் இருந்தது.
நானே படம் முடிஞ்சு பார்க்கும்போது சவுண்டு எபேக்ட்ஸ் எல்லாம் இருக்கே எங்கே இதெல்லாம் பன்னீங்க. இல்லீங்க இதெல்லாம் லைவ் சவுண்டுஸ்ன்னு சொன்னப்போ கொஞ்சம் அதிர்ச்சியடைந்தேன். ஆன்த்தா ஸ்பாட்டு பதிவு செஞ்சு மிக சிறப்பா செஞ்சிருக்காரு ஒலிபதிவாளர் நித்தியானந்தம்.
அவருக்கும் என்னோட வாழ்த்துக்கள். இதுல என்னன்னா சிறப்பு அம்சம் சில இடங்கள, ஆக்ஷன் சிக்குவன்சு இயல்பா எதார்த்தமா எடிட்டு பன்றது வேற, சில நேரங்களில் டெம்போவையோ சேர்த்து இந்த படத்தை மிக அழகா தொகுத்து அதை எடிட்டு பன்ன அருணாச்சலம் அவர்களுக்கும் உண்மையிலே வாழ்த்துக்கள் சொல்லனும். ஏன்னா சில படங்கள எடிட்டிங்கும், டெம்போவும் சரியா வேலை செய்யாது, ஆனா இதுல ரொம்ப அற்புதமா பன்னீயிருக்காங்க, சவுண்டு மற்றும் எடிட்டிங் அது மிக்ஸ் ஆகுது. சில இடங்களில் ஒன்றினைந்து போகும்போது ரொம்ப அற்புதமா இருந்தது. அவருக்கும் என்னோட வாழ்த்துக்கள். நன்றி..
ஆண்மையுள்ள தலைப்பு சினம்கொள்.
இந்த திரைப்படத்தின் தலைப்பே ஒரு வீரியமுள்ள, ஆண்மையுள்ள தலைப்பு சினம்கொள். ரொம்ப அற்புதமான தலைப்பு சினம்கொள். அடிமைகளாக இருந்தவன் அவத்த மாதிரி இருக்ககூடாது அதை பிரேக் பன்னி எந்தரிக்கனும், தலைவர் பிரபாகரன் இருந்த காலத்தில அவர் சினம்கொண்டார். சினம்கொண்டு எழுந்ததோட வேகம் அதை தலைப்பா வெச்சது ரொம்ப பிரமாதமா இருக்கு, அவர் தலைவர் இருந்த காலத்தில ஒரு பெரிய ஆசை ஒன்னு ஈழப்பிள்ளைகள் எல்லாம் சினிமா துறையில் மிக பிரமாண்டமா வரனும். நம்முடைய செய்திகளை உலகத்துக்கு போகனுமின்னு சொல்வாரு. எங்கிட்டியே இதை பேசியிருக்காரு. அவருடைய ஆசையை அவேராட காலகட்டத்தில் நிறைவேறுச்சோ இல்லையோ, அவர்களுக்கு பின்னால் நிறைவேற்றி இருக்காரு ரஞ்சித்.
ஏன்னா இத எடுத்து சொல்றதுக்கு ஒரு திரை ஊடகம் வேனுமின்னு ரொம்ப பிரியப்பட்டாரு., அதை இன்றைய காலகட்டத்தில் இவர்களால் அதை செய்துவிட்டார்கள். அவர் இருந்து இந்த படத்தை பார்த்திருக்கனும், பின்விளைவுகளை அவர் இருந்த காலத்தில இருந்த விளைவுகள் வேறு அவருக்கும் பின்னால் விளைந்த விளைவு வேறு கொஞ்சம் கஷ்டமா, ரொம்ப சங்கடமா இருந்தது, இருந்தாலும் அவருடைய ஆசை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆக உலகதமிழர்கள் எல்லாம் அந்த நிகழ்வுக்கு பின்னால் தற்போதைய நிலை என்ன அப்படிங்கிறது பார்க்கிறதுக்கு பெரிய பதிவு அனைவரும் பாருங்க, இந்த கலைஞர்களை ஊக்குவியுங்கள் நன்றி…
இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.