தமிழ் திரையுலகில் தான் நடிக்க வந்த புதிதில் தன்னை ஒரு தயாரிப்பாளர் அவமானப்படுத்தி வெளியே போ என்று சொல்லி விட்டதாகவும் அந்த தயாரிப்பாளர் முன் இரண்டே வருடங்களில் சூப்பர் ஸ்டார் ஆகி காட்டியதாகவும் ரஜினிகாந்த் தர்பாரில் இசை வெளியீட்டு விழாவின் போது தெரிவித்தார்.
பாரதிராஜாவின் 16 வயதினிலே’ படத்தில் பரட்டை என்ற கேரக்டரில் தான் நடித்துக்கொண்டிருக்கும் போது தனக்கு மிகப் பெரிய புகழ் கிடைத்ததாகவும் அந்த புகழின் காரணமாக தன்னை ஒரு தயாரிப்பாளர் அணுகி, தான் தயாரிக்கும் படத்தில் புக் செய்ய வந்ததாகவும் ஆனால் அவர் கடைசி நேரத்தில் திடீரென தனக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்து அவமானப்படுத்தியதாக கூறினார்
மேலும் இதனால்’ நான் மனம் வருந்தினேன், இதே கோடம்பாக்கத்தில் பெரிய ஸ்டாராக ஆகி காட்டுகிறேன் என்று மனதுக்குள் சவால் விட்டு இரண்டுஆண்டுகளில் சூப்பர் ஸ்டார்ஆகினேன்’ என்றுகூறியுள்ளார்.