‘பச்சை என்கிற காத்து’, ‘மெர்லின்’ ஆகிய படங்களில் கவனம் ஈர்த்த இயக்குநர் வ.கீரா, இம்முறை ‘எட்டு திக்கும் பற’ படத்தின் மூலமாக வருகிறார். இப்படம் குறித்து இயக்குநர் கீரா கூறும்போது, ‘பற என்பது சாதியத்தின் குறியீடு அல்ல, பற என்பது விடுதலையின் குறியீடு. ஆனால் அதை சென்சாரில் புரிந்துகொள்ளவில்லை.
எதிர்ப்பு வந்ததால் பெயரை எட்டு திக்கும் பற என்று மாற்றியுள்ளேன். நான் சாதி வெறியன் அல்ல. அப்படி ஒரு சாயத்தை பூசி மிரட்டுகிறார்கள். போன், சமூகவலைதளங்கள் மூலமாக கொலை மிரட்டல்கள் வருகின்றன. நான் சாதி எதிர்ப்பாளன். ஒரே இரவில் நடக்கும் கதையை மொத்தமாக ஒரே புள்ளியில் இணைப்பது தான் படத்தின் சுவாரசியம்.
ஆணவக்கொலையை எதிர்க்கும் படமாக இப்படம் இருக்கும். படத்தில் அம்பேத்கர் என்ற கேரக்டரில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். சமூக நலனுக்காக போராடுபவர்களுக்கு ஆதரவாக இருக்கும் கேரக்டரை அம்பேத்கர் கேரக்டர் வெளிப்படுத்தும் அதை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்’. இவ்வாறு அவர் கூறினார்.