0
முதல் படமான மதயானை கூட்டம் படத்திலேயே, தென் தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவு முறைகளை மிக அழுத்தமாக பதிவு செய்து கவனத்தை ஈர்த்தவர், விக்ரம் சுகுமாரன். தற்போது இவர், தேரும் போரும் என்ற படத்தை இயக்குகிறார். தாய் சரவணனின், நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பாக, நடிகர் அருள்தாஸ் மற்றும் கார்த்திக்துரை தயாரிக்கின்றனர். அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார்.
படம் குறித்து, விக்ரம் சுகுமாரன் கூறுகையில், ”சிவகங்கை பகுதி மக்களின் வாழ்க்கையை, எதார்த்தமாக பதிவு செய்யும் படம் இது,” என்றார். மைனா, கும்கி, பைரவா, ஸ்கெட்ச் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை இயக்குனராவும் லாரன்ஸ் கிஷோர் எடிட்டராகவும் பணியாற்றுகிறனர். ஜஸ்டின் பிரபகாரன் இசையமைக்கும் இந்த படத்துக்காக அட்டகத்தி தினேஷ் தனது தோற்றத்தை வித்தியாசமாக மாற்றியுள்ளார்.