செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகை ஜோதிகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்:காயத்ரி ரகுராம்.

நடிகை ஜோதிகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்:காயத்ரி ரகுராம்.

1 minutes read

நடிகை ஜோதிகா விருது வழங்கும் விழா நிகழ்ச்சியொன்றில் பேசும்போது கோவில்களுக்கு செலவிடும் அதே தொகையை மருத்துவமனைகளுக்கும் பள்ளிகளுக்கும் கொடுங்கள் என்று பேசியது சர்ச்சையானது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பும், இன்னொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்தனர். சமூக வலைத்தளத்திலும் விவாதமாக மாறியது.

இதுகுறித்து நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- நடிகர்களுக்கு கோவில் கட்டுபவர்களுக்கு அவ்வளவுதான் அறிவு. இப்படிப்பட்டவர்கள் எப்போதுமே சனாதன தர்மத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள். காரணம் அவர்களின் மூளை அவ்வளவுதான். தி.மு.க, தி.க., நாம் தமிழர், விடுதலைசிறுத்தைகள் கட்சிகளின் ஏவலர்கள் ஆதாரமற்ற கருத்துகளுடன் வருகின்றனர்.

காயத்ரி ரகுராம்

ஜோதிகா பேச்சை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது. தனது பேச்சுக்காக ஜோதிகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஜோதிகா பேச்சில் சமத்துவம் இல்லை. பிரபலமாக இருக்கும் அவர் உண்மையற்ற தகவல்களை பரப்ப கூடாது. ஜோதிகா மீது எனக்கு வெறுப்பு இல்லை. மேடையில் பேசும்போது கவனமாக பேச வேண்டும். இந்து பற்றி பேசும்போது மற்ற மதங்களையும் உள்ளடக்கி பேசி இருக்கலாம்.”

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More