தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களின் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் சண்டை போட்டுக்கொள்வார்கள்.
இந்நிலையில் நேற்று கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மது கடைகள் திறக்கப்பட்டன. அங்கு மது வாங்க மக்கள் அதிக அளவில் வரிசைகட்டி நின்றனர். பெண்களும் கூட வரிசையில் நின்றி மது பாட்டில்களை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் நடிகர் அஜித் பல வருடங்கள் முன்பு தேர்தலில் வாக்களிக்க வரிசையில் நின்றுகொண்டிருந்த போது எடுத்த புகைப்படத்தை சிலர் ட்விட்டரில் பதிவிட்டு “பெங்களூரில் மது வாங்க நின்ற கூட்டத்தின் ஒரு பகுதி” என சிலர் ட்விட் செய்துள்ளனர். இது தொடர்பாக நேற்று இரவு சமூக வலைத்தளங்களில் விஜய்-அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் மோதிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அஜித்தின் புகைப்படத்தை இப்படி தவறாக பயன்படுத்தியிருப்பதற்கு பிரபல இயக்குனர் ஜான் மகேந்திரன் கண்டனம் தெரிவித்து “Very cheap posting…” என அவர் கூறியுள்ளார். இதையடுத்து அந்த டுவிட் நீக்கப்பட்டுள்ளது.இயக்குனர் ஜான் மகேந்திரன் விஜயை வைத்து சச்சின் என்ற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.