தாதிமாரை செல்போனில் தொடர்புகொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் மோகன்லால்.அமீரகத்தில் ‘கொரோனா’ வைரசால் பாதிக்கப்பட்ட பலரும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு டாக்டர்கள், தாதிமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் ஓய்வின்றி சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சர்வதேச செவிலியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அபுதாபி, துபாய், சார்ஜா மற்றும் அல் அய்ன் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ‘கொரோனா’ சிகிச்சை வார்டுகளில் பணியாற்றும் நர்சுகளை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் சிறப்பாக பணியாற்றும் நர்சுகளின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு நடிகர் மோகன்லாலிடம் தரப்பட்டது.
திட்டமிட்டபடி அந்த செல்போன் எண்களில் ஒவ்வொரு தாதியையும் நடிகர் மோகன்லால் தொடர்பு கொண்டு பேசினார். இதனை சற்றும் எதிர்பாராத நர்சுகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அப்போது இந்த அவசர நேரத்தில் பணியாற்றும் நீங்கள்தான் உண்மையான கதாநாயகர்கள் என பாராட்டு தெரிவித்தார்.