தற்கொலை செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட்டை திரும்ப வாங்க என்று பிரபல நடிகை கண்கலங்கி வீடியோ வெளியிட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் திடீரென மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலைக்கு ஒரு பக்கம் பாலிவுட் திரையுலகமே கண்ணீர் வடித்தாலும், இன்னொரு பக்கம் அவருடைய தற்கொலைக்கு பாலிவுட் முன்னணி பிரமுகர்கள் தான் காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் அஜித் நடித்த ’வில்லன்’ விக்ரம் நடித்த ’ஜெமினி’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை கிரண், சுஷாந்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ஒரு பக்கம் சுஷாந்த் சிரித்தபடி இருக்கும் பழைய வீடியோ பிளே ஆகிக் கொண்டிருக்கும் போது, இன்னொரு பக்கம் கிரண், கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இந்த வீடியோவில் அவர் ’சுஷாந்த் ப்ளீஸ் திரும்ப வாருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.