அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்த நடிகை சமிக்ஷா தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.காதலித்தவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை சமிக்ஷா
கணவருடன் நடிகை சமிக்ஷா
2005-ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சமிக்ஷா. இப்படத்தை தொடர்ந்து மனதோடு மழைக்காலம், மெர்குரி பூக்கள், உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தார்.
இவர் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் பாடகர் ஷயீல் ஓஸ்வாலை கடந்த 3-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். சமிக்ஷா – ஷயீல் ஓஸ்வால் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்.
2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சமிக்ஷா, 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவருக்கு அமேபிர் என்ற 10 வயது மகன் இருக்கிறார்.