நடிகை ஸ்ரீதிவ்யா கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நாயகியாக நடித்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால் அதன் பின்னர் அவர் நடித்த தமிழ் படங்கள் படுதோல்வி அடைந்தன. இதனால் இவருக்கு பட வாய்ப்பு குறைய தொடங்கியது. கடைசியாக இவர் ’சங்கிலி புங்கிலி கதவ தொர’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் தனது இணைய தள பக்கத்தில்,’ வாழ்க்கையில் பிழைக்க போராட்டங்கள் தேவை, ஏனென்றால் எழுந்து நிற்க, கீழே விழுவது என்னவென்று உங்களுக்குத் தெரியும்!’ என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.