தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் வைகைப்புயல் வடிவேலு. நடிகர் ராஜ்கிரணால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டு கமலஹாசன் மூலம் வளர்ந்தவர். நாளுக்கு நாள் படங்களில் இவரது காமெடி காட்சிகள் பெரிய ஹிட் அடிக்க முன்னணி காமெடியனாக வளர்ந்து விட்டார்.
அதுமட்டுமில்லாமல் வடிவேலு நடித்தால் படம் ஹிட் என்ற அளவுக்கு மாஸ் காட்டி வந்தார். வடிவேலுவுக்காகவே மக்கள் தியேட்டருக்கு படையெடுத்த காலங்களும் உண்டு. ஆனால் வடிவேலு வளர்ந்து வந்த காலகட்டங்களில் அவர் மட்டுமே முன்னாடி காமெடியனாக இருந்தார்.
உடன் யாருமே வளரவில்லை என்பதுதான் கவலையான விஷயம். அது குறித்து விசாரிக்கையில் பலரும் பல்வேறு விதமான தகவல்களை கொடுத்தனர். சமீபத்தில்கூட சிங்கமுத்து வடிவேலு யாரையும் வளர விட மாட்டார் என கூறியிருந்தார்.
ஆனால் இருவருக்கும் ஏற்கனவே ஒரு சில பிரச்சனைகள் எழுந்ததால் பொறாமையில் கூறுகிறார் என எடுத்துக் கொண்டோம். ஆனால் தற்போது திருப்பாச்சி, வெற்றிக்கொடிகட்டு போன்ற படங்களில் நடித்த பெஞ்சமின் வடிவேலுவை பற்றி கூறியது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
வெற்றிக்கொடிகட்டு படத்தில் வடிவேலுவை பெஞ்சமின் கெட்ட வார்த்தைகள் பேசுவது போன்ற காட்சி எடுக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் அந்த காட்சியில் நடிக்கும்போது வடிவேலு தன்னை நடிக்க விடாமல் தன்னை கேவலமாக பார்த்தும், என்னை திட்டி விட்டு நீ சினிமாவில் வாழ்ந்து விடுவாயா என்ற அளவுக்கு நடந்து கொண்டாராம்.
பின்னர் வடிவேலு இல்லாமல் அந்த காட்சி எடுக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டதாம். அந்த ஒரு காட்சியில் மட்டுமே தயாரிப்பாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அந்த ஒரு காட்சிக்காக தான் 18 நாட்கள் புளியமரத்தடியில் வெயிட் பண்ணியதாகவும் தெரிவித்திருந்தார்.
என்னதான் காமெடி கிங்காக இருந்தாலும் நாளுக்கு நாள் வடிவேலுவை பற்றிய செய்திகள் அவர் மீதான நல்லெண்ணத்தை குறைத்து வருகிறது. இருந்தாலும் இது பற்றி வடிவேலு வாயைத் திறந்தால் மட்டுமே அனைவருக்கும் உண்மை தெரியவரும்