கடந்த சில நாட்களாகவே வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் திருமணம் குறித்த செய்திகள் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. மேலும் இந்தத் திருமணத்தின் சர்ச்சை குறித்து தயாரிப்பாளர் ரவிந்தர் மற்றும் சூர்யாதேவி ஆகியோர் வெளியிடும் வீடியோக்களும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது
முதல் மனைவியை விவாகரத்து செய்யாத பீட்டர்பாலை, வனிதா திருமணம் செய்தது குறித்து தயாரிப்பாளர் ரவீந்தர் அளித்த பேட்டியில் பல கேள்விகள் எழுப்பியிருந்தார். ஒரு பெண்ணின் வாழ்க்கையும் அவர்களுடைய குழந்தையின் வாழ்க்கையும் என்ன ஆவது என்றும் வனிதாவிடம் அவர் ஆவேசமாக கேள்வி
இந்த நிலையில் அந்த பேட்டியில் அவர் ஒரு அதிர்ச்சி தரும் தகவலையும் தெரிவித்துள்ளார். பீட்டர்பாலின் கல்லூரி செல்லும் மகன் இன்னும் தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவ்வப்போது அவர் தன்னுடன் மொபைல் போன் மூலம் பேசுவதாகவும் கூறிய தயாரிப்பாளர் ரவீந்தர், சமீபத்தில் பேசியபோது, ‘தான் மெடிக்கல் ஸ்டோர் ஒன்றுக்கு சமீபத்தில் சென்றபோது, அந்த மெடிக்கல் கடைக்காரர் அப்பாவின் லிப்லாக் வீடியோ எப்போது வெளிவரும் என்று கேட்டதாகவும் அப்போது தான் அவமானத்தால் கூனிக்குறுகி குறுகியதாகவும், தற்கொலை செய்து கொள்ள வேண்டும் போல் இருக்கிறது என்றும் தயாரிப்பாளர் ரவிந்தரிடம் போன் செய்து வருத்தப்பட்டதாக கூறியுள்ளார். இப்படிக் கேட்கும்போது அந்த பையனுக்கு நான் என்ன பதில் சொல்வேன்? என்றும் தற்கொலை செய்துகொள் என்று சொல்ல முடியுமா? என்றும் வனிதாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்