வனிதாவின் மூன்றாவது திருமண விவகாரம் தான் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.வனிதா திருமணம் செய்து கொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது.
இப்படி ஒரு நிலையில் தனக்கு விவாகரத்து கொடுக்காமல் தனது கணவர் வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் பீட்டரின் மனைவி எலிசபெத்.வனிதாவின் திருமண விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வரும் பெரும்பாலானோர் கேட்கும் ஒரே கேள்வி இப்படி ஒரு பிரச்சனை இருக்கையில் பீட்டர் பவுல் ஏன் இன்னும் பேட்டிகளில் பங்கு பெறாமல் மௌனம் சாதித்து வருகிறார் என்பதுதான்.
இந்த நிலையில் வனிதாவின் யூடியூப் சேனலில் முதன் முறையாக பீட்டர் பால் பேட்டியளித்திருந்தார். அதில் தனக்கு நடந்த சோக பக்கங்களை விளக்கியிருந்தார்.
இந்த சேனலில் பேட்டி எடுப்பதற்கு முன் வனிதா பீட்டர் பவுல் உடன் இருக்கும் ரொமான்டிக்கான புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.அதில் முதல் கப்பல் பேட்டி என்று குறிப்பிட்டிருக்கிறார் வனிதா பதிவிட்டு இருக்கும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் உடன் கொடுத்த போசை போலவே இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள்.