செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மது கோப்பையுடன் ஒரு ஆணுடன் வனிதா விஜயகுமார்.

மது கோப்பையுடன் ஒரு ஆணுடன் வனிதா விஜயகுமார்.

2 minutes read

வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை திருமணம் செய்ததில் இருந்து தொடர்ந்து ஏதாவது விளக்கம் அளித்துக் கொண்டே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகே பலரும் வனிதாவை விமர்சிக்கிறார்கள்.

விவாகரத்தாகாத நபரை திருமணம் செய்து கொண்டு ஹெலனின் வாழ்க்கையை வனிதா கெடுத்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் வனிதா கையில் மது கோப்பையுடன் நடுத்தர வயது நபர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி தீயாக பரவியது.

அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் இது யார் புதுசா இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்கள். தன்னை பற்றி பலரும் பேசுவதை பார்த்த வனிதா அந்த நபரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கூறியதாவது, இவர் யார் என்று கேட்டவர்களுக்காக. இவர் எங்கள் குடும்ப நண்பர். எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று விளக்கம் அளித்தார்.

விளக்கம் அளித்து வெளியிட்ட புகைப்படத்தை வனிதா பின்னர் நீக்கிவிட்டார். அதை பார்த்தவர்கள், குடும்ப நண்பர், குடும்பத்தில் ஒருவர் தானே, அப்புறம் ஏன் அந்த போஸ்ட்டை நீக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கிடையே தன்னை விமர்சித்த நடிகைகள் கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் மீது வனிதா பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

முன்னதாக வனிதா விஜயகுமார், பீட்டர் பால் திருமணம் பற்றி யூடியூப் சேனலில் விமர்சித்த சூர்யா தேவி கைது செய்யப்பட்டார். வனிதா அளித்த புகாரின்பேரில் போலீசார் சூர்யா தேவியை நேற்று கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். சூர்யா தேவி மனித்தன்மையே இல்லாமல் தன்னை பற்றி மோசமாக பேசியபோதிலும் அவரின் குழந்தைகளின் நலனை மனதில் வைத்து ஜாமீன் கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார் வனிதா.

கஸ்தூரியும், லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக இருப்பதை பார்த்த வனிதா யார் வேண்டுமானும், யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவாக இருக்கட்டும், எனக்கு கவலை இல்லை என்றார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனையால் போலீசார் பிசியாக இருக்கிறார்கள். இது போன்ற நேரத்தில் அவர்களை தொல்லை செய்யக் கூடாது. அதனால் பேட்டியில் என்னை மோசமாக பேசியும் வனிதா மீது நான் புகார் அளிக்கவில்லை என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பேட்டியில் வனிதா லக்ஷ்மி ராமகிருஷ்ணனை மரியாதை இல்லாமல் பேசியதுடன், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எக்ஸ்போஸ் செய்யப் போவதாக கூறினார். இதை பார்த்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஒரு பெண் ஒரு புருஷனுடன் மட்டுமே வாழ்வது வனிதாவுக்கு அதிசமயாக இருக்கிறது போன்று என்றார்.

தஞ்சை ஆண்களை தப்பா பேசல, பெருமையா பேசினேன்: மீண்டும் ட்விட்டருக்கு வந்த வனிதா விளக்கம்

இந்நிலையில் தஞ்சாவூரில் இருப்பவர்கள் எல்லாம் இரண்டு பொண்டாட்டி வைத்திருக்கிறார்கள் என்று கூறிய வனிதா மீது பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கஸ்தூரி மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை விளாசிய வனிதா ட்விட்டரில் இருந்து வெளியேறினார். இதையடுத்து மீண்டும் ட்விட்டரில் ஆக்டிவ் ஆகிவிட்டார் வனிதா. தஞ்சாவூரை சேர்ந்த ஆண்களை பற்றி தான் பெருமையாக தான் பேசியதாக வனிதா ட்வீட் செய்திருக்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More