செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் ஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த இளம் பாடகி

ஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த இளம் பாடகி

1 minutes read

ஏ.ஆர்.ரகுமானால் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்ட இளம் பாடகி அவரை இசையால் ஈர்த்துள்ளார்.வளர்ந்து வரும் தமிழ் பின்னணி பாடகி தர்ஷனா கே.டி., இவர் ஏ.ஆர்.ரகுமானால் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டார்.

அழகிய தமிழ் மகன் படத்தில்  “மதுரைக்கு போகாதடி” பாடலின் மூலம் அறிமுகமான இவர், ஓகே கண்மணியில் “காரா ஆட்டக்காரா”, “தீர உலா”, காஞ்சனா 2 வில் “கருப்பு பேரழகா”, ஓகே கண்மணி ஆந்திர மொழியில் “மெண்டல் மனதில்” மற்றும் இந்தியில் பல  பாடல்களை பாடியுள்ளார்.

பாடகி தர்ஷனா

தற்போது இவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் “99” என்ற  கவர் ஆல்பத்தைஹேங்டிரம் என்ற புதிய இசை கருவியை பயன்படுத்தி இந்த பாடலை உருவாக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் பல பாடல்களை பாடியிருந்தாலும் இவர் உருவாக்கிய 99 என்ற கவர் ஆல்பம் ஏ.ஆர்.ரகுமானை மிகவும் ஈர்த்துள்ளது. 

ஏ.ஆர்.ரகுமான் இந்த ஆல்பத்தை  பார்த்தது மட்டும் இல்லாமல் அவருடைய  சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தது, எனக்கு  புதிய உற்சாகத்தையும் அடுத்தகட்ட இடத்திற்கு நான் செல்வதற்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன் என்று பாடகி தர்ஷனா கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More