நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான மீராமிதுன் கடந்த சில வாரங்களாகவே முக்கிய நட்சத்திரங்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக விஜய் மற்றும் சூர்யா குறித்து சமீபத்தில் சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
இந்த நிலையில் தமிழ் நடிகை சனம் செட்டி மீராவுக்கு எச்சரிக்கையுடன் கூட வேண்டுகோளை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: எஸ்ஏ சந்திரசேகர் அவர்களின் முயற்சியால் விஜய் அவர்கள் சினிமாவுக்கு வந்து இருக்கலாம். ஆனால் அதன் பின்னர் ஐந்து வருடங்கள் அவர் சினிமாவில் ஜெயிக்க பட்ட கஷ்டங்கள் அனைவருக்கும் தெரியும். ஒரே ஒரு வெற்றியை அவர் சினிமாவில் பெறுவதற்கு கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஆகிவிட்டது
அவர் நடிக்கவே கூடாது என்று பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தன்னுடைய விடா முயற்சியில் அவர் வெற்றி பெற்றார். இன்று அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் முழுக்க முழுக்க அது அவரது அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய தொழில் மேல் உள்ள அக்கறை என்பதை புரிந்துகொள்ளவேண்டும்
விஜய் அவர்களுக்கு இன்று கிடைத்திருக்கும் புகழ் பணத்தால் வாங்க முடியாதது. அவர் மாதிரி உயர்ந்த இடத்தில் உள்ள ஒரு நடிகரை பற்றி பேசுவதற்கு முன்பு ஆயிரம் தடவை யோசிக்க வேண்டும் . நீங்கள் செய்யும் விமர்சனத்திற்கு விஜய் அவர்கள் இருக்கும் உயரத்திற்கு கண்டிப்பாக பதில் அளிக்க மாட்டார்.
உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை. உங்களுக்கு பதில் சொல்ல நானே போதும். இனிமேல் தயவு செய்து சைபர் புல்லிங், பெண்ணுக்கு அராஜம் போன்ற கருத்துக்களை கூறி காமெடி செய்ய வேண்டாம். இதையெல்லாம் நீங்கள் தான் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.