கொரோனா வைரஸ் காரணமாக பொழுதுபோக்குத் துறை மிகவும் பாதித்துள்ளது. தமிழ் சினிமாவில் மட்டும் கிட்டத்தட்ட மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வறுமைக்குத் தள்ளப்படும் அபாயத்தில் உள்ளனர்.
முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மீண்டும் படபிடிப்பை நடத்த அனுமதி வழங்குமாறு திரைத்துறையினர், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், தற்போது வரை சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் இறுதியில் பிக்பாஸ் 4 படப்பிடிப்பைத் தொடங்க கமல்ஹாசன் முன் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் பட்டியலில் இளம் கதாநாயகிகளான சுனைனா, ரம்யா பாண்டியன் மற்றும் அதுல்யா ரவி,ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
இவர்களுடன் நடிகர் இர்பான், நடிகைகள் கிரண்,வித்யுலேகா ராமன் மற்றும் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி உள்ளிட்டோரும் இடம் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை சுனைனா ட்விட்டரில் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது..ரியாலிட்டி ஷோவுக்கு நான் சென்றால் என் படங்களை யார் முடிப்பது.?
நான் எப்போதும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க ஆசைப்பட்டதில்லை… ஒருபோதும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் எனக் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சுனைனா.