2 ஆண்டுகளுக்கு முன்பு ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் ஹிந்தியில் வெளியானபடம் ‘அந்தாதூன்’. இந்தப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
சுமார் 40 கோடி ரூபாயில் உருவான இந்தப் படம் உலக அளவில் சுமார் 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
புகழ் பெற்ற பிரெஞ்சு குறும்படமான தி பியானோ டியூனர் கதையை தழுவி இது எடுக்கப்பட்டது.
ஒரு பார்வையற்ற பியோனோ கலைஞனின் காதல் கதை.
ஏக் ஹசினா தய், ஜானி கத்தார், ஏஜெண்ட் வினோத், பதேல்பூர் படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இந்தப்படத்தை இயக்கி இருந்தார்.
இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது.
இறுதியில், தமிழ் ரீமேக் உரிமையைநடிகர் தியாகராஜன் கைப்பற்றினார்.
இதில் பிரசாந்த் நடிக்கிறார் அவருடன் கார்த்திக், யோகி பாபுநடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
முதலில் நடிகர் தியாகராஜன் இயக்குவதாக இருந்தது. இதனிடையே, இந்த ரீமேக்கை மோகன் ராஜா இயக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அவரும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் இதன் படப்பிடிப்புகள் செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தியாராகஜன் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாது: இது ஒரு பியானோ கலைஞனின் கதை. பிரசாந்த் லண்டனில் முறைப்படி பியானோ கற்றவர்.
இதன் திரைக்கதைதான் படத்தில் முதல் ஹீரோ. அந்த அளவிற்கு விறுவிறுப்பாக இருக்கும்.
ஏப்ரல் மாதமே படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தோம். கொரோனா ஊடரங்கால் அது முடியவில்லை.
செப்டம்பரில் இருந்து படப்பிடிப்பை தொடங்குகிறோம். சென்னை, புதுச்சேரியில் படப்பிடிப்பு நடக்கிறது.
கிளைமாக்ஸ் லண்டனில் படமாக்கப்படுகிறது.