நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’.
இப்படத்தை ‘துரோகம்’, ‘இறுதிச் சுற்று’ போன்ற படங்களை
இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
“ஏர் டெக்கான்” உரிமையாளரான ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டஇப்படத்தின் டீசர் கடந்த மாதம் ஜனவரி 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த திரைப்படம் அமேசானில் அக்டோபர் 30ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை நடிகர் சூர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.