பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை செஜல் சர்மா ஜனவரி 24 ஆம் தேதி மும்பை இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது பாத்திரங்களுக்கு பிரபலமானவர்
ஒரு தற்கொலைக் குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது, அதில் அவர் தனிப்பட்ட காரணங்களால் தீவிர நடவடிக்கை எடுத்தார் என்றும் அதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும் கூறினார். எவ்வாறாயினும், தனது காதலன் தனது உயிரை மாய்த்துக் கொள்ள உதவியதாக நடிகையின் அம்மா போலீசில் வலியுறுத்தினார். மேலதிக விசாரணையில், செஜல் ஒரு ஆதித்யா வாஷிஸ்டுக்கு பல அழைப்புகளை செய்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
நடிகை சேஜலின் செல்போன் ஆய்வு செய்த போலீசார், தற்கொலை செய்து கொண்ட அன்று, டெல்லியைச் சேர்ந்த மாடல் மற்றும் ஜிம் பயிற்சியாளர் ஆதித்யா வசிஷ்ட் என்பவருக்கு மட்டும் தொடர்ந்து போனில் பேசியுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. நடிகை சேஜல் சர்மாவுக்கு மேலம் பிரபலம் ஆகி பாலிவுட் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை இருந்துள்ளது.
இதை அறிந்த ஆதித்யா, பில்லி சூனியம் செய்தால் விரைவில் பிரபலம் அடைந்து விடலாம் என்றும் அதற்கு பணம் செலவாகும் என்று கூறியுள்ளார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த சேஜல் சர்மாவிடம் ஏராளமாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தன்னிடம் உள்ள பணத்தை பறிக்கவே காதல், பில்லி சூனியம் என மோசடி செய்தது தெரிய வந்தது.இதனால் ஜனவரி 24ஆம் தேதி ஆதித்யாவிடம் கடுமையாக சண்டை போட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையிலான காதல் முறிந்துள்ளது. இதை அடுத்து மன உளைச்சலுக்கு ஆளான சேஜல் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து நடிகை சேஜலிடம் பிரபலமாக்குவதாகக்கூறி பில்லி சூனியம் என பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டு, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து ஆதித்யாவை கைது செய்தனர்.
குறுகிய காலத்தில் சின்னத்திரையில் பிரபலமான நடிகை, மேலும் பிரபலமாகி சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு பில்லி சூனியம் என பணத்தை இழந்து, மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.