ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி விரைவில் குணமடைய நடிகர் மம்மூட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்த மாறுபாட்டை தவிர ரஜினிக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி விரைவில் குணமடைய வேண்டி கமல்ஹாசன், சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராகவா லாரன்ஸ் உள்பட பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி டுவிட்டரில், “விரைவில் குணமடையுங்கள் சூர்யா… அன்புடன் தேவா” என பதிவிட்டுள்ளார். ரஜினியும், மம்மூட்டியும் மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் சூர்யா, தேவா என்கிற பெயரில் நண்பர்களாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.