கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த படத்தயாரிப்பாளர் கே.பி.ஃபிலிம்ஸ் பாலு காலமானார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த படத்தயாரிப்பாளர் கே.பி.ஃபிலிம்ஸ் பாலு காலமானார்.
சின்னத்தம்பி உள்பட 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.பி.ஃபிலிம்ஸ் பாலு கடந்த ஒருமாதமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவுக்கு திரைப்பட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.