நடிகர் விஷாலுடன் 15 ஆண்டுகளுக்கு முன் நடித்த நடிகை ஒருவர் தற்போது மீண்டும் அவர் நடிக்கும் அடுத்த படத்தில் இணைய இருக்கிறார்.நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’சிவப்பதிகாரம்’. கரு பழனியப்பன் இயக்கிய இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக மம்தா மோகன் தாஸ் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்னர் அருண்விஜய்யின் ‘தடையறத்தாக்க’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் ’எனிமி’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் மம்தா மோகன் தாஸ் நடிக்க உள்ளார். இவர் அனேகமாக ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
விஷாலுக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி ரவி நடிக்கிறார். பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கும் இந்த இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.