செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா!

இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா!

1 minutes read

அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. பாகுபலி படத்தின் மூலம் தேவசேனாவாய் உலகளாவிய பெருமையைப் பெற்றார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதனால் அடுத்து நடிக்கும் படங்களின் கதை தேர்வில் கவனமாக இருக்கிறாராம் அனுஷ்கா.

அந்த வகையில் இவர் அடுத்ததாக காதலை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தை மகேஷ் என்பவர் இயக்க உள்ளார். மேலும் இப்படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக இளம் நடிகர் நவீன் போலிஷெட்டி நடிக்க உள்ளாராம். முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த அனுஷ்கா, இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டது திரையுலகினரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More