தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது, இயக்குனர் ஆர்.கண்ணன் இதனை இயக்குகிறார்.மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இப்படத்தை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். இதற்கான ரீமேக் உரிமையை இயக்குனர் ஆர்.கண்ணன் கைப்பற்றி உள்ளார். இப்படத்தை அவரே இயக்கியும் வருகிறார். பெயரிடப்படாத இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.
இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது அதுகுறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பாடகி சின்மயியின் கணவரும், நடிகருமான ராகுல் ரவீந்திரன் தான் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.
இவர் ஏற்கனவே ‘மாஸ்கோவின் காவிரி’, ‘விண்மீன்கள்’, ‘வணக்கம் சென்னை’ போன்ற தமிழ் படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.