தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.
திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த மீனா, தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார். இவர் கைவசம், ரஜினியின் ‘அண்ணாத்த’, திரிஷ்யம் தெலுங்கு ரீமேக் போன்ற படங்கள் உள்ளன.
இந்நிலையில், நடிகை மீனா, புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி, பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக மீனா நடிக்க உள்ளாராம். கோபிசந்த் மிலினேனி இப்படத்தை இயக்க உள்ளார்.
மீனாவும், பாலகிருஷ்ணாவும் கடைசியாக 1999-ம் ஆண்டு வெளியான கிருஷ்ண பாபு என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதன்பின் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் இணைய உள்ளனர்.