சாலையோரம் நாதஸ்வரம் வாசித்து உதவி கேட்கும் ஒருவரின் வீடியோவை பகிர்ந்து, அவரை கண்டுபிடிக்க உதவுமாறு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.ஜிவி பிரகாஷ்இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதோடு சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் 43-வது படம் ஆகியவற்றிற்கு இசையமைத்தும் வருகிறார்.
இந்நிலையில் சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரின் வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட இணையவாசி ஒருவர், இவரது வாசிப்பையும், இருக்கும் நிலைமையையும் பாருங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதைப் பார்த்த ஜி.வி.பிரகாஷ், ‘இந்த நபரை கண்டுபிடிக்க முடிந்தால், நாம் அவரை பாடல் பதிவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்புகள் மிக திறமையாகவும், துல்லியமாகவும் இருக்கின்றன’ எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை ரீ-ட்வீட் செய்திருக்கிறார்.