0
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாளை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் நேற்று கொண்டாடி நார்கள் மேலும் அவரைப்பற்றிய பல நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இசையமைப்பாளர் தினா தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‛‛எஸ்பிபியின் 75 பிறந்தநாளை இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தி வணங்குகிறோம். தமிழ்நாடு அரசுக்கு ஒரு வேண்டுகோள். அண்ணாரின் உருவ சிலையை சென்னையில் நிறுவ வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.