மும்பை திரையுலகம் என்றாலே அதிரடிக்குக் கொஞ்சமும் குறைவிருக்காது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். பல சம்பவங்களை திரையுலகினர் வெளியில் சொல்வதில்லை. இப்போது ராணி முகர்ஜி தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
முஜ்சே தோஸ்தி கரோகே படத்திற்குப் பிறகு வேலை இல்லாமல் 8 மாதங்கள் சும்மா இருந்தேன். என் கெரியர் முடிந்துவிட்டது, ராணி அவ்வளவு தான் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்தார்கள்.
அந்த நேரத்தில் தான் சாத்தியா பட வாய்ப்பு வந்தது. சாத்தியாவில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்பதைத் தெரிவிக்க என் பெற்றோர் யஷ் சோப்ராவைச் சந்திக்கச் சென்றார்கள். யஷ் சோப்ராவோ தன் அறைக் கதவைப் பூட்டிவிட்டு எனக்கு போன் செய்தார். உன் பெற்றோரை ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டேன். சாத்தியா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் மட்டுமே அவர்களை வெளியே விடுவேன் என்றதால் நான் சாத்தியாவில் நடித்தேன் என்றார். ராணி முகர்ஜியின் இந்தக் கருத்து பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.