பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் லதா மங்கேஷ்கர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் மும்பை பிரீச்கேண்டி வைத்தியசாலை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பல ஆயிரம் பின்னணி பாடல்களை பாடியுள்ள 92 வயதான லதா மங்கேஷ்கருக்கு ஜனவரி 8ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, வயதின் காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், லதா மங்கேஷ்கருக்கு தற்போது செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.