2002-ஆம் ஆண்டு இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான படம் ”5 ஸ்டார்”. இப்படத்தை இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் பிரசன்னா மற்றும் கனிகா இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் நடிகை கனிகா அறிமுகமான பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துவந்தார்.
இந்நிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை கனிகா மீண்டும் முதல் படத்தில் நடித்த நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்காக இந்த கூட்டணி இணைந்திருக்கிறது. இதனை நடிகை கனிகா அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.