‘மாஸ்டர்’ பட புகழ் நடிகர் மகேந்திரன் நடிப்பில் தயாராகி வரும் ‘அமீ கோ கேரேஜ்’ படத்திற்காக ‘இசை அசுரன்’ ஜீ .வி . பிரகாஷ் குமார் மற்றும் ‘குக் வித் கோமாளி‘ பிரபலம் ஷிவாங்கி ஆகியோர் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் பிரஷாந்த் நாகராஜன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’.
இதில் ‘மாஸ்டர்’ பட புகழ் நடிகர் மகேந்திரன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார், இவருடன் ‘ஜெய்பீம்’ புகழ் ஜி.எம்.சுந்தர், தீபாபாலு, ஆதிரா ராஜ், முரளீதரன் உள்ளிட்ட பலர் நடித்தருக்கிறார்கள்.
விஜயகுமார் சோலை முத்து ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு பாலமுரளிபாலு இசையமைக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறை வடைந்து இறுதி கட்ட பணிகள் நடைபெ ற்றுவருகிறது.
இந்நிலையில் படத்தில் இடம்பெ றும் ஒரு மெல்லிசை பாடலுக்காக ‘இசை அசுரன்’ ஜீ .வி.பிரகாஷ் குமாரும், ‘ குக் வித் கோமாளி’ பிரபலம் ஷிவாங்கியும் ஒன்றிணை ந்து குரல் கொடுத்திருக்கிறார்கள்.
படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ” கேங்ஸ்டர் உலகில் தவிர்க்க முடியாத நபராக இயங்கி வரும் நாயகனிடம் நாயகி அடைக்கலமாகிறார்.
அதைத்தொடர்ந்து நடை பெறும் சம்பவங்கள் தான் படத்தின் பாதிக்கதை .
பழைய வாகனங்களின் இருப்பிடமாகவும், பழுது நீக்கும் தளமாகவும் இருக்கும் கேரே ஜ் பின்னணியில் படத்தின் திரைக்கதை அமை க்கப்பட்டிருப்பதால் படத்திற்கு ‘அமீகோ கேரேஜ்’ என பெயரிடப்பட்டிருக்கி றது ” என்றார்.