செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நினைத்தால் எதையும் சாதிக்கலாம் | இலங்கையின் இளங்குயில் நடிகை பூர்விகா!

நினைத்தால் எதையும் சாதிக்கலாம் | இலங்கையின் இளங்குயில் நடிகை பூர்விகா!

1 minutes read

இலங்கையைச் சேர்ந்த பலர் தமிழ் சினிமாவில் ஏற்கனவே ஜொலித்திருக்கும் நிலையில் தற்போது இலங்கையின் இளங்குயில் பூர்விகா என்பவர் தமிழ் திரையுலகில் மெல்ல மெல்ல தனது முத்திரையைப் பதித்து வருகிறார்

இலங்கை முல்லைத்தீவை சேர்ந்த பூர்விகா, பிசினஸ் மேனேஜ்மெண்ட் கல்வியை படித்தாலும் அவருக்கு சினிமா துறையின் மீது உள்ள ஆசை காரணமாக முதலில் மாடலிங், குறும்படங்கள் அதன்பின் சினிமா என மெல்ல மெல்ல முன்னேறி வருகிறார்

தனது நடிப்பு குறித்து பூர்விகா கூறியபோது, ‘ஒரு நடிகையாக நான் எனது துறையை மிகவும் நேசிக்கின்றேன் என்றும் இரண்டு வருடங்களாக இந்தப் துறையில் பயணிக்கின்றேன் என்றும், சினிமாவில் பல நல்லவை, கெட்டவைகளை இதுவரை நான் கண்டுள்ளேன் என்றும், சினிமா என்னும் ஆசையை காட்டி வருகின்ற இளைஞர்கள் தவறான பாதையை காட்டுகின்ற போலிகளும் இங்கே இருக்கின்றனர் என்றும், எனவே சரியான வழியை, நம்பிக்கைக்கு உரிய வழியை என்று நாம் அடையாளம் கண்டபின் நமக்கான பாதையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பேட்டி ஒன்றில் நடிகை பூர்விகா கூறியுள்ளார்

மேலும் சினிமா துறையின் மீது ஆர்வம் உள்ளவர்கள் திறமையிருந்தும், சமூகம் குடும்பம் தன் சுற்றம் என்ன சொல்லிவிடுமோ என்ற எண்ணத்தால் நடிப்பதற்கு வர தயங்குகின்றனர் என்றும், இதனால் அவர்களுடைய திறமைகள் வெளிவராமல் போகின்றன என்றும் புதிதாக வரும் கலைஞர்களை ஊக்குவிப்பது சமூகத்தின் அங்கம் ஆகும் என்றும், சினிமாவில் உள்ளவர்கள் மன உறுதியுடன் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்றும் அந்தப் பேட்டியில் பூர்விகா தெரிவித்துள்ளார்.

‘ஒரு வினாடியில்’, ‘முப்பரிமாணம்’, ‘காதல் தந்த தேவதையே’, ‘வசியக்காரி’ போன்ற ஆல்பங்களிலும், ‘குடிமகன்’, ‘வாடி வாடி’, ‘இரவினில் ஆட்டம்’ போன்ற குறும்படங்களிலும், ‘வதம்’ என்ற திரைப்படத்திலும் பூர்விகா நடித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More