செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் நான் எப்போதும் ஹீரோ தான் | இயக்குனர் பாக்யராஜ் பேச்சு

நான் எப்போதும் ஹீரோ தான் | இயக்குனர் பாக்யராஜ் பேச்சு

1 minutes read

சமீபத்தில் நடந்த ‘3.6.9’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இயக்குனர் பாக்யராஜ் பேசியது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட பாக்யராஜ், 21 வருடங்களுக்கு பிறகு நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘3.6.9’. இப்படத்தை பிஜிஎஸ் சரவணகுமார் தயார்ப்பில் இயக்குனர் சிவ மாதவ் இயக்கியுள்ளார். உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக, நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது இப்படம். 24 கேமராக்களில் ஒளிப்பதிவு செய்ய, 450 தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்க, 75க்கும் மேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

இதில் படக்குழுவினருடன் பலரும் கலந்துக் கொண்டனர். இதில், இயக்குனர், நடிகர் பாக்யராஜ் பேசியதாவது, 21 வருஷம் ஆச்சு என்று சொல்லி திரும்ப திரும்ப போட்டு என்னையே சங்கடப்படுத்தி விட்டார்கள். படத்தில் ஸ்கீரினில் வர்றவன் தான் ஹீரோவா கதை திரைக்கதை எல்லாம் சும்மாவா, அது இருந்தால் தான் ஹீரோ. நான் அவ்வப்போது நடித்துகொண்டு தான் இருக்கிறேன் நான் எப்போதும் ஹீரோ தான். இங்கு இயக்குனர் என்னை படைத்த அப்பா அம்மாவுக்கு என ஆரம்பித்தது எனக்கு பிடித்திருந்தது. நான் இதுவரை கிறிஸ்தவன் கெட்டப் போட்டதில்லை. இந்தப்படம் தான் முதல் முறை. இப்படம் சயின்ஸ் பிக்சன் என்றார்கள் இவர்கள் திட்டமிட்டது எல்லாம் பார்க்க பிரமிப்பாக இருந்தது. 81 நிமிடம் தான் எடுப்பார்கள் என்பதால் 3 நாள் ரிகர்சல் செய்தாரகள். யாராவது சொதாப்பினால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது. ஆனால் இவர்கள் 1 மாதம் ரிகர்சல் செய்து வந்திருந்தார்கள். மிக கச்சிதமாக திட்டமிட்டு எடுத்தார்கள். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். படத்தில் நான் மறந்து விடுவேன் என பாண்டி எனக்கு டயலாக் சொல்லி அசத்தினார். அனைவரும் சிறப்பாக நடித்து படத்தை எடுத்து விட்டார்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி என்று பேசினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More