செல்ஃபி பட வெற்றி விழா சென்னையில் நடந்தது. இதில் கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, “செல்ஃபி என்ற தலைப்பை வைத்து மதிமாறன் என்கிட்ட ஒப்புதல் கேட்டதும் சரி என்றேன்.
இந்தப் படத்தில் வேலை செய்த அனைவருக்கும் தொழில் பக்தி இருந்தது. இந்தப் படத்தை நான் எடுக்கணும்னு நினைச்சேன் தம்பிகள் கேட்டதும் சரி தயாரிங்க என்றேன். வெறும் 38 நாட்களில் இந்தப் படத்தை இவ்வளவு சிறப்பாக எடுத்ததற்கு மதிமாறனை நிறைய சொல்லலாம்.
ஜி.வி.பிரகாஷ் நமக்கு கிடைத்த ஒரு நல் முத்து. செல்ஃபி படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. ஜி.வி.பிரகாஷ் இன்னும் உயரிய இடத்திற்குப் போகவேண்டும்.
தம்பி குணாநிதி திறமையாக நடித்திருக்கிறார். முதல்படம் என்று சொல்ல முடியா அளவிற்கு நடித்திருக்கிறார்.
160 அடி பாயக்கூடியவன். சபரிஷ் 30 வருடம் அனுபவம் உள்ள தயாரிப்பாளர் போல செயல்படுகிறார். நல்ல படங்களை சபரிஷ் தயாரிக்க வேண்டும். கவுதம் மேனனிடம் ஒரு போன் பண்ணி சொன்னதும் உடனே நடிக்க ஒத்துக்கிட்டார்.
அவர் இயக்குனர் மதிமாறனை மிகவும் பாராட்டினார். வி.கிரியேஷன்ஸ் சார்பாக மதிமாறன் ஒருபடம் பண்ணணும். அதற்கு நான் இப்பவே ரூ.10 லட்சம் அட் வான்ஸ் கொடுக்கிறேன். இந்தப் படம் தியேட்டருக்குத் தான் வரணும்னு நினைச்சேன்” என்று பேசினார்